நச்சலூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழையூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் மது விற்ற கீழகுறிச்சி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.