வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ராமநாதபுரம் கிராம பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமலாபுரம் இந்திரா காலனி சேர்ந்த சாலமன் மகன் ரவி (வயது 38) என்பவரிடம் சோதனை செய்தபோது அனுமதியின்றி 15 மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.