அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழைமேடு துணை மின்நிலைய அலுவலகம் அருகே மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் தழுதாழைமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உட்கோட்டை வடக்கு காலனி தெருவை சேர்ந்த அறிவழகன் (வயது 58) என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.