கபிஸ்தலம்:
சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்புறம்பியம் குளத்தாங்கரை தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது37) என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 24 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.