திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வரகூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வரகூர் குளத்து கரை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சாக்கு பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடிக்க முயன்ற போது பெண் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூர் மாணிக்கம் (வயது38) என்பதும், தப்பி ஓடிய பெண் வரகூர் குளத்து தெரு சரண்யா (28) என்பதும், மதுவிற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்து அவரிடம் இருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய சரண்யாவை வலைவீசி தேடிவருகி்ன்றனர்.