காரையூர்:
காரையூர் பகுதியில் மது பாட்டில் விற்கப்படுவதாக காரையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் காரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்றுகொண்டிருந்த காரையூரை சேர்ந்த கருப்பையா மகன் அழகு (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.