உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் வேல்முருகன்(வயது 37) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.