புத்தாண்டையொட்டி ரூ.7 கோடிக்கு மது விற்பனை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி ரூ.7 கோடியே 4 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-01-01 12:18 GMT

ஆங்கில புத்தாண்டு

ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. இதனை இளைஞர்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும் வாணவேடிக்கையுடன் வரவேற்றனர். கேளிக்கை விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டு பிறப்பை மதுபான பிரியர்கள் தங்கள் நண்பர்களுடன் மதுபானம் அருந்தியபடி உற்சாகத்துடன் கொண்டாடினர்.

ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை அதிகமாக காணப்படும். இதையொட்டி டாஸ்மாக் கடைகளில் அதிகளவு மது, பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டை சிறப்பாக கொண்டாட மதுபிரியர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் டாஸ்மாக் கடைகளின் முன்பு குவிந்தனர். வரிசையில் நின்று தங்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகள் விற்று தீர்ந்தன.

ரூ.7 கோடிக்கு மதுவிற்பனை

வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 110 டாஸ்மாக் கடைகளில் ரூ.4 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகின. அதேபோன்று அரக்கோணம் கோட்டத்துக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 88 டாஸ்மாக் கடைகளில் ரூ.2 கோடியே 76 லட்சத்துக்கு மது, பீர் வகைகள் விற்று தீர்ந்தன. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புத்தாண்டையொட்டி ரூ.7 கோடியே 4 லட்சத்துக்கு விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்தாண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.5 கோடியே 44 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. கடந்தாண்டை விட இந்தாண்டு ரூ.1 கோடியே 60 லட்சம் மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்