தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்பு காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-06 18:33 GMT

புதுச்சேரி ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 30). சாராயம் விற்றது தொடர்பாக இவரை வளவனூர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரின் இத்தகையை செயலை கட்டுப்படுத்தும் வகையில், பாலச்சந்திரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதையடுத்து பாலச்சந்திரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பாலச்சந்திரனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வளவனூர் போலீசார் வழங்கினர். 

Tags:    

மேலும் செய்திகள்