வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-23 18:51 GMT

சிவகாசி,

சிவகாசியை சுற்றி உள்ள பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு காரணங்களால் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த கிராம மக்களை குறிவைத்து சிலர் அருகில் உள்ள கிராமத்தில் செயல்படும் மதுக்கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர். இது குறித்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தனிப்படை அமைத்து அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாரனேரி போலீசார் ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சந்தேகம் அடையும் வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த வீட்டிற்குள் புகுந்து திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டில் 109 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த ஜெயபால் (வயது 70) என்பவரிடம் இதுகுறித்து விசாரித்த போது அவர் மதுக்கடைகளில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து மதுக்கடைகள் இல்லாத நேரங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்