அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற மே 2-ந்தேதி தேரோட்டத்தையொட்டி திருத்தேர் அலங்கரிக்கும் பணி

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற மே 2-ந்தேதி தேரோட்டத்தையொட்டி திருத்தேர் அலங்கரிக்கும் பணி

Update: 2023-04-13 10:46 GMT

அவினாசி

அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற மே 2-ந்தேதி தேரோட்டத்தையொட்டி திருத்தேர் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

அவினாசிலிங்கேஸ்வரர் கோவில்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில், தமிழகத்தில் 3-வது பெரிய தேர் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைப்பெற்ற அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் வருகிற மே மாதம் 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

முன்னாக வருகிற 25-ந்தேதி கோவிலில் கொடியேற்றமும், 26-ந்தேதி சூரிய,சந்திர மண்டல காட்சிகளும், 27-ந்தேதி அதிகார நந்தி, கிளி வாகன காட்சிகளும் நடக்கிறது. 28-ந்தேதி கைலாசவாகனம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மே 2-ந்தேதி தேரோட்டம்

29-ந்தேதி 63 நாயன்மார்கள், பஞ்சமூர்த்திகள் வைபவம் நடக்கிறது. 30-ந்தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கிறது. மே 1-ந்தேதி சாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

மே 2-ந்தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 3-ந்தேதி பெரிய தேர் நிலையை வந்தடையும். இதையடுத்து 4-ந்தேதி அம்மன் தேரோட்டமும், 5-ந்தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ந்தேதி தெப்பத்தேர்த்திருவிழாவும். 7-ந்தேதி நடராஜர் தரிசன காட்சியும் நடக்கிறது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு பெரியதேர், அம்மன் தேர் ஆகிய தேர்கள் அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்