மேச்சேரி அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் செத்தன மேய்க்க சென்ற தொழிலாளி மயங்கி விழுந்தார்
மேச்சேரி அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் செத்தன. அவற்றை மேய்க்க சென்ற தொழிலாளி மயங்கி விழுந்தார்.;
மேச்சேரி,
4 ஆடுகள் செத்தன
மேச்சேரி அருகே பானாபுரம் ஊராட்சி பருத்திக்காடு வேட்டை பாறை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 24). இவர் நேற்று மாலை பொம்மையன் கரடு பகுதியில் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார்.
அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அந்த பகுதியில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியது. மேலும் அருகில் குடிசையோரம் மழைக்கு ஆடுகளுடன் சுந்தர்ராஜ் ஒதுங்கி நின்றார். அவர் மீதும், ஆடுகள் மீதும் மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டன.
மயங்கி விழுந்தார்
அதே நேரத்தில் மயங்கி கீழே விழுந்த சுந்தர்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேச்சேரி அருகே மின்னல் தாக்கி 4 ஆடுகள் செத்ததுடன், மேய்க்க சென்ற தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.