விற்பனைக்கு குவிந்துள்ள விதவிதமான அகல்விளக்குகள்

கார்த்திகை தீப திருவிழாவுக்காக காங்கயம் கடைகளில் விதவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

Update: 2022-12-03 17:11 GMT

கார்த்திகை தீப திருவிழாவுக்காக காங்கயம் கடைகளில் விதவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை தீப திருவிழா வரும் 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் கோவில்கள், வீடுகள், தோட்டங்கள்,வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களை அகல் விளக்குகளை ஏற்றி வைத்து அலங்கரிப்பது வழக்கம். களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளை தீபத்திருநாளுக்கு 1 மாதத்திற்கு முன்னரே மண்பாண்டக் கலைஞர்கள் தயார் செய்து கடைகளுக்கு அனுப்பி வைப்பர்.

வரும் 6-ந் தேதி தீபத்திருவிழா வருவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அகல் விளக்குகளை வாங்கி வருகின்றனர். காங்கயம் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் விதவிதமான அகல்விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. சாதாரண ஒரு முகம் கொண்ட சிறிய விளக்குகள், அதைவிட சற்று பெரிய விளக்குகள், பெரிய அளவிலான பஞ்சமுக விளக்குகள், தட்டுப் போன்ற அமைப்பில் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்ட விளக்குகள் என விதவிதமான அகல் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுடன் வாங்கி சென்றனர்

சாதாரண சிறிய விளக்குகள் ரூ.2 முதல் ரூ. 5 வரையிலும் அதைவிட பெரிய விளக்குகள் அளவைப் பொருத்து ரூ.5 முதல் ரூ.30 வரையிலும், தட்டுப்போன்ற அமைப்பில் வர்ணம் பூசப்பட்ட விளக்குகள் ஒரு செட் ரூ.250 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அகல் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்