தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2022-12-09 19:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

திருச்சுழி அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). தையல் தொழிலாளி. இவருக்கு 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி செந்தில்குமாரிடம் வலியுறுத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 7.3.2013 அன்று அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்று கொலை செய்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து பெண்ணை கொலை செய்த செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்