தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வாலிபரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-09-29 18:45 GMT

வாலிபரின் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கட்டிட தொழிலாளி

மதுரை அருகே உள்ள பொதும்பு என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது32) கட்டிட தொழிலாளி. இவர் சுல்தான்பேட்டை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் நடைபெற்ற கான்கிரீட் பணியில் ஈடுபட்டு வந்தார்.

அங்கு மற்றொரு தொழிலாளி சேர்வராயன் என்ற ஜெயராஜ் (42) என்பவரும் நண்பர்களாக தங்கி இருந்து வேலை செய்து வந்தார். கடந்த 6.7.2019 அன்று 2 பேரும் மதுகுடித்துவிட்டு தாங்கள் தங்கி இருந்த அறைக்கு வந்துள்ளனர்.

பாட்டு சத்தம்

அப்போது ஜெயராஜ் தான் வைத்து இருந்த சிறிய ரேடியோவில் பாடலை சத்தமாக வைத்து கேட்டுள்ளார். அது ஸ்ரீகண்டனுக்கு இடையூறாக இருந்துள்ளது. சத்தத்தை குறைக்குமாறு கூறி தகராறு செய்தார்.

பின்னர் ஒரு இரும்பு கம்பியை எடுத்து வந்து ரேடியோவை அடித்து நொறுக்கியதுடன், ஜெயராஜையும் தாக்கி உள்ளார்.

இதில் அவருக்கு வாயில் அடிபட்டு பல் உடைந்து போனது.

கல்லைப் போட்டு கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து வந்து ஸ்ரீகண்டனின் தலையில் கல்லால் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்ரீகண்டன் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்தனர். இதுபற்றிய வழக்கு விசாரணை கோவை வெடிகுண்டு விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பாலு, குற்றம்சாட்டப்பட்ட ஜெயராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,500 அபராதமும்விதித்து தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்