சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-07-25 19:57 GMT


மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43). இவர் கடந்த 2017-ம் ஆண்டில் சுரேஷ், 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின்பேரில் போக்சோ மற்றும் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவு என 2 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்