எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் என்.வெங்கடாஜலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பீமா ரத்னா பாலிசியை முகவர்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரியும், பாலிசி பத்திரத்தில் இந்தியை நீக்கிவிட்டு தமிழில் அச்சிட்டு வழங்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் தேவராஜி, பி.ஆதிகேசவன், வி.வி.சீனிவாசன், ஏ.ரங்கன், ஜி.ரவிசந்திரன், வி.ராஜசேகரன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு பேசினார்கள். முடிவில் பொருளாளர் எஸ்.வேலு நன்றி கூறினார்.