திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்ஆர்ப்பாட்டம நடத்தினர்.;
திருச்செந்தூர்:
டாக்டர் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து நெற்றியில் பட்டை, குங்குமம் வைத்து இழிவுப்படுத்திய சமூக விரோதிகளை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், காயல் சமூகநீதி பேரவை செயலாளர் அகமது சாஹிபு தொடக்க உரையாற்றினார். கட்சி மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்செல்வி, லட்சுமிசரண்ராஜ், திருச்செந்தூர் நகர செயலாளர் உதயா, உடன்குடி நகர செயலாளர் தவுபிக் அன்சாரி, நகர செயலாளர்கள் அய்யப்பன், மாணிக்கம், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். , கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி நன்றி கூறினார்.