சாத்தான்குளம் வட்டாரத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொழுநோய் கண்டறியும் முகாம்

சாத்தான்குளம் வட்டாரத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு தொழுநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-09-15 18:45 GMT

தடடார்மடம்:

சாத்தான்குளம் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொழுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபசிங் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் பிரிவு அலுவலக நலக்கல்வியாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் மேற்பார்வையாளர் நியூட்டன், சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, சண்முகசுந்தரம், சின்னத்தம்பி, ஆய்வக நுட்பனர் பாலகிருஷ்ணன் கொண்ட குழுவினரும், முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமையில் இளம் சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வல பணியாளர்கள,் ஆஷா பணியாளர்கள் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு சோதனை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்