முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவருக்கு மிரட்டல்

முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவருக்கு மிரட்டல் விடுத்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update:2023-10-23 12:15 IST

கந்திலி ஊராட்சி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்ஆறுமுகம். முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவரான இவருக்கு சொந்தமான இடம் கசிநாயக்கன்பட்டி மெயின்ரோட்டில் உள்ளது. இந்த இடத்தில் சம்பவத்தன்று அவர் இருந்தபோது அதே ஊரைச்சேர்ந்த ராஜா (வயது 62), அவரது மனைவி நிவேஷ்குமாரி, மகன் கோகுல் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை தாகத வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆர்.ஆறுமுகம் கந்திலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்