ராமநாதபுரத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

ராமநாதபுரத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

Update: 2022-12-22 18:45 GMT

ராமநாதபுரத்தில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுத்தலைவர் ராஜா தலைமையில், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), தமிழரசி (மானாமதுரை), நாகைமாலி (கீழ்வேலூர்), பாலாஜி (திருப்போரூர்) ஆகியோர் முன்னிலையில் பொது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பொது நிறுவன குழுத் தலைவர் ராஜா கூறியதாவது:- சென்னையை போல தென் மாவட்டங்களில் அதிக அளவில் தொழிற்சாலைகளை அமைக்க அரசு திட்டமிட இந்த குழு அறிவுறுத்துகிறது. சிப்காட் தொழில் வளாகங்களில் தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ராமேசுவரம் கடல்பகுதியில் பக்தர்களால் வீசப்படும் கழிவுகளை அகற்ற மாசுகட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

முன்னதாக வாலாந்தரவை கோரமண்டல் மின் உற்பத்தி நிலையம், பட்டினம்காத்தான் துணை மின் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டனர். களிமண்குண்டு ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தனர். 35 பயனாளிகளுக்கு ரூ.19.74 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்