வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-07-19 00:24 IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவி மரணமடைந்த சம்பவத்தையொட்டி பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நெல்லையில் வக்கீல்கள் ரமேஷ், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் நேற்று காலையில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்து கோர்ட்டு முன்பு சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்