சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கு; கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சேவல் சண்டைக்கு அனுமதி கோரி வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது;
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்கள் கிராம கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 100 ஆண்டுகளாக சேவல்கட்டு எனப்படும் சேவல் சண்டை போட்டி நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சேவல் சண்டை நடத்த உள்ளோம். இதற்கு அனுமதியும், உரிய போலீஸ் பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் "சேவல் சண்டைக்கு அனுமதி வழங்குவது குறித்து கரூர் கலெக்டர் வருகிற 7-ந் தேதிக்கு முன்னதாக தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.