சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 19:37 GMT

நெல்லையில் பெண் வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கும்பலை பொது இடத்தில் தூக்கிலிட வலியுறுத்தியும், அங்கு நடந்து வரும் கொடூர சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த வக்கீல் மணிமாலா தலைமை தாங்கினார். வக்கீல்கள் பழனி, சுகிதா, ஷிபாயா, மகிள், பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வக்கீல் சங்க செயலாளர் காமராஜ், உதவி செயலாளர் பரமசிவன், முன்னாள் செயலாளர் செந்தில்குமார், மணிகண்டன், ஜாகீர் உசேன், சுசீலா, மனோன்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்