"இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை எதிர்க்கிறேன்" - மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு

சட்டப்படிப்புகளில் தாய்மொழியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

Update: 2022-12-02 12:58 GMT

சென்னை,

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர்.

இதன் பின்னர் விழாவில் பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, இந்தியாவிற்கு பொதுவான ஒரே மொழி என்ற திணிப்பை தான் எதிர்ப்பதாகவும், மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சட்டப்படிப்புகளில் தாய்மொழி கொண்டு வரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வழக்காடும் மொழியை சாமானியர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், சாமானியருக்கும் நீதித்துறைக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்