லேண்டர் சந்திரனில் இறங்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
லேண்டர் சந்திரனில் இறங்குவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்தபோது, 'இந்திய விண்வெளித்துறையில் மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடக்கிறது. இந்தியாவின் விண்கலம் சந்திரயான்-3 மூலம் ஏவப்பட்ட லேண்டர் சந்திரனில் இறங்குவது மகிழ்ச்சியான விஷயம். இந்த சாதனையை நிகழ்த்தும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இந்திய விண்வெளியின் வளர்ச்சிக்கு வித்திட்டு உயர்ந்த பாதைக்கு கொண்டு வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைவுகூர கடமைப்பட்டு உள்ளோம்' என்றார்.