குருக்கபுரம் ஏரி நிரம்பியது கிடாவெட்டி உபரிநீரை பொதுமக்கள் வரவேற்றனர்
குருக்கபுரம் ஏரி நிரம்பியது கிடாவெட்டி உபரிநீரை பொதுமக்கள் வரவேற்றனர்
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குருக்கபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட குருக்கபுரம் ஏரி 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் சித்தர் மலைப்பகுதியில் இருந்து ஓடை வழியாக குருக்கபுரம் ஏரிக்கு தண்ணீர் வந்து ஏரி நிரம்பியது. இதையொட்டி குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் பொதுமக்கள் மலர்தூவி கிடாவெட்டி உபரிநீரை வரவேற்றனர். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், குணசேகரன், மணிமேகலை, ரேவதி, மஞ்சுளா, ருக்குமணி, விஜயா, வீரமணி, ஊராட்சி செயலாளர் நைனாமலை, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.