படேதாள ஏரி நிரம்பியதால் பாப்பாரப்பட்டி ஏரிக்கு வந்த உபரிநீர் கிடா வெட்டி தெப்பம் விட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

படேதாள ஏரி நிரம்பியதால் பாப்பாரப்பட்டி ஏரிக்கு வந்த உபரிநீர் கிடா வெட்டி தெப்பம் விட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2022-09-07 16:09 GMT

கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் உள்ள படேதாள ஏரிக்கு மார்க்கண்டேயன் நதியில் இருந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வந்தது. இதன் காரணமாக சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் படேதாள ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் பர்கூர் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளுக்கு நேற்று முன்தினம் வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏரி நிரம்பி கிருஷ்ணகிரி அருகே பாப்பாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் சென்றது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் நேற்று காலை ஏரிக்கு சென்று மலர்தூவி தண்ணீரை வரவேற்றதுடன், கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து, ஏரியில் தெப்பம் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி அசோக்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், ஊராட்சி தலைவர் மஞ்சுளா வெங்கடேசன், துணைத்தலைவர் நாராயணகுமார், கிளை செயலாளர் முத்து, கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே ஏரிக்கு தண்ணீர் வந்தததையடுத்து ஏராளமான வாலிபர்கள் மற்றும் பெண்கள் ஏரியில் குளித்தும், மீன்களை பிடித்தும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்