திருப்பூர்
அவினாசி அருகே தெக்கலூர் பகுதியை சேர்ந்த பேன்சி கடை ஊழியர் முருகேசன் (வயது 26). 10-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அவினாசி மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் முருகேசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய்க்கு முன்மொழிந்தார். அவர் பரிந்துரையின்படி கலெக்டர் வினீத், முருகேசனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.