திருச்சியில் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-07-05 00:12 GMT

கோப்புப்படம் 

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தாராநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று இரவு காந்தி மார்க்கெட் பகுதியில் டீ சாப்பிடுவதற்காக சுரேஷ் சென்றார். அப்போது அங்கு வந்த அவரது மைத்துனர் சந்திரகுமாருக்கும் (52), சுரேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

அப்போது சந்திரகுமார் கத்தியால் சுரேசை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்துவிட்டு, சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காந்திமார்க்கெட் போலீசார் சந்திரகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்