சிதம்பரம் அருகே நாய் கடித்து தொழிலாளி சாவு
சிதம்பரம் அருகே நாய் கடித்து தொழிலாளி உயிாிழந்தாா்.;
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை பவழக்கார தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 32). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று, சிதம்பரத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் வெளியே இருந்த தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதற்காக அவர் நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.