கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி - மனைவி உட்பட 3 பேர் கைது

தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு வந்த போலீசார், ராசுவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2024-02-14 21:21 GMT

கரூர்,

கரூர் மாவட்டம் குப்பமேட்டுப்பட்டி ஒத்த வீடு பகுதியை சேர்ந்தவர் ராசு. 47 வயதான இவர், தன் மனைவியான வள்ளியுடன் சேர்ந்து மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், ராசுவின் மனைவி வள்ளி, பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொன்னம்பலம் மற்றும் சின்னகாளை ஆகியோருடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வள்ளியை தேடி இருவரும் வீட்டுக்கு வந்த போது வீட்டிற்குள் இருந்த ராசு இருவரையும் கண்டு ஆத்திரமடையவே, தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி கைகலப்பான நிலையில், சத்தம் கேட்டு வந்த ராசுவின் மனைவி வள்ளி, தன் தகாத உறவு காதலர்களுடன் சேர்ந்து கணவனை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் கிராமத்திற்கு வந்த போலீசார், ராசுவின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை மறித்த கிராம மக்கள் ராசுவின் மனைவி வள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்