தொழிலாளர் தினம் - சிவப்பு சட்டை அணிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

தொழிலாளர் தினத்தையொட்டி சிவப்பு சட்டை அணிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Update: 2023-05-01 03:49 GMT

சென்னை,

தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சருடன், திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தொழிலாள தோழர்கள் அனைவருக்கும் எனது மே நாள் நல்வாழ்த்துகள். தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.

விட்டுக் கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்ல்; பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர். மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி ஏம்.ஏல்,ஏக்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்