குருவிமலை தடுப்பணை நிரம்பியது
போளூர் பகுதியில் பெய்த மழையால் குருவிமலை தடுப்பணை நிரம்பியது.;
போளூர்
போளூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.
நேற்று சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையினால் போளூர் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் போளூர் ஏரிக்கு நீராதாரமாக விளங்கக்கூடிய ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் போளூர் வழியாக செல்லும் செய்யாறில் வெள்ளம் வந்துள்ளது.
இதனால் போளூர் அருகே குருவிமலை குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது.