குறும்பனை மீனவர் 'திடீர்' சாவு
சவுதி அரேபியாவில் குறும்பனை மீனவர் ‘திடீர்’ சாவு;
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள குறும்பனை சிலுவையா தெருவை சேர்ந்தவர் சகாய ரோஜஸ் (வயது46), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு சகாய மெல்பா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சகாய ரோஜஸ் கடந்த ஒரு ஆண்டாக சவுதி அரேபியா அல்-ஒஸ்தா கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இதற்காக அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். வேலை முடிந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த சகாய ரோஜஸ் இரவில் வழக்கம் போல் மனைவியுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர் பேசி கொண்டிருந்த போதே திடீரென மயங்கிய கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவருடன் தங்கியிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர் இறந்த சம்பவம் குறித்து சவுதி அரேபியா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இறந்த மீனவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் மீனவர் உடலை துரிதமாக ஊருக்கு கொண்டு வரவேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தூதரக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.