தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள்

Update: 2023-09-20 17:08 GMT


குடிமங்கலத்தில் பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை ரோட்டின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைத்து விடுகின்றனர். குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் குடியிருப்பு, கடைவீதிகள் நிறைந்த பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் கடைவீதி குடியிருப்பு வாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதோடு வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குப்பைகளை தரம் பிரித்து கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டாமல் சாலை ஓரங்களிலும் குடியிருப்புகளின் அருகிலும் கொட்டி தீ வைத்து விடுகின்றனர். ஊராட்சிகளுக்கு குப்பைகளை அள்ளிச் செல்ல மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனம் கொடுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே குப்பைகளை சேகரித்து தீ வைத்து விடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்