அனலாத்தி ஐயன் சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம்
வள்ளியூர் அருகே அனலாத்தி ஐயன் சாஸ்தா கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே ஆனைக்குளம் அனலாத்தி ஐயன் சாஸ்தா கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
அதனை தொடர்ந்து மகர சக்தி கணபதி, விராட் விஸ்வபிரம்மா சன்னதி, அனலாத்தி ஐயன் சாஸ்தா, பூர்ண புஷ்கலா தேவிகள், வனபத்திரகாளி அம்பாள், மகிஷாசூரமர்த்தினி அம்பாள் மற்றும் அங்குள்ள பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை 10.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட அனைத்து விஸ்வகர்மா சமுதாய கூட்டமைப்பு நிறுவனர் தலைவர்-காப்பாளர் பாஸ்கரன், தலைவர் மாணிக்கம், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் நாகேஷ் மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.