மணலூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணலூர் பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சா மி தரிசனம் செய்தனர்.;

Update:2022-07-13 22:33 IST

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளது மணலூர் கிராமம். இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து புதிதாக பாலமுருகன் கோவிலை கட்டினர். இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

பின்னர் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, பூர்ணாகுதி நடந்து, 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.

இதில் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கோபுர கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எஸ். எஸ் அரசுசங்கராபுரம், வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் அசோக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செல்வி பாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் என்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்