மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி மகாசக்தி நகரில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் முடிந்து அரண்மனை ராஜேசுவரி அம்மன் கோவில் சர்வசாதகம் ராஜாராம் பட்டர் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடானது. மகா கணபதி, பாலசுப்பிரமணிய சுவாமி, மகா சக்தி மாரியம்மன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.