கும்பாபிஷேக பணிகள் நாளை தொடக்கம்

சிவகாசி சிவன் கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நாளை தொடங்குகிறது.

Update: 2023-04-22 19:09 GMT

சிவகாசி, 

சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள விஸ்வநாதசுவாமி- விசாலாட்சி அம்மன் என்கிற சிவன் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள் சிவகாசி சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தேவையான ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு கோவிலில் பாலஸ்தாபன விழா நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. கோவில் கட்டுமான பணிகள், வர்ணம் தீட்டுதல், பராமரிப்பு பணிகள் என அனைத்தும் முடிக்க சுமார் 10 மாதகாலம் ஆகும் என்றும் அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்