பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
வெள்ளூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த வெள்ளூர் கிராமத்தில் கமண்டல நதி தென்கரையில் கிராம தேவதை பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி முதல்கால யாக பூஜை, 2-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் பொன்னியம்மன் வீதி உலாவும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.