ஒட்டன்சத்திரம் அருகே காவேரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியில் உள்ள காவேரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-09-01 16:57 GMT

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காவேரியம்மாபட்டியில் உள்ள காவேரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடந்தன. பின்னர் பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவில் கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்