திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்...!

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2022-07-06 02:50 GMT

திருவட்டார்,

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானதும் நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த 29-ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று கும்ப கலசத்தில் வராகு தானியங்கள் நிறைக்கும் பணி நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்திருந்தனர்.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிராசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம் உபதேவன்களுக்கு பிரதிஷ்டை, பஞ்சவாத்தியம், நாதஸ்வர மேளம் முழங்க காலை 5.10 முதல் 5.50-க்குள்ளா நேரத்தில் பிரதிஷ்டை, ஜீவ கலச அபிஷேகம், காலை 6.00 முதல் 6.50 வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்