பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியீடு: குமரியில் 95.08 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 95.08 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2022-06-27 16:44 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 95.08 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-1 தேர்வு முடிவு

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது. குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் பிளஸ்-1 தேர்வை 11 ஆயிரத்து 282 மாணவர்களும், 11 ஆயிரத்து 681 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 963 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 325 மாணவர்களும், 11 ஆயிரத்து 508 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 833 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.08 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குமரி மாவட்டம் 4-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

நாகர்கோவில்-குழித்துறை

கல்வி மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 499 மாணவர்களும், 3 ஆயிரத்து 849 மாணவிகளும் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 198 மாணவர்களும், 3 ஆயிரத்து 793 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.15 சதவீதம் தேர்ச்சி ஆகும். இதே போல திருவட்டார் கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 521 மாணவர்களும், 2 ஆயிரத்து 432 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 269 மாணவர்களும், 2 ஆயிரத்து 389 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 94 சதவீதம் ஆகும்.

குழித்துறை கல்வி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 73 மாணவர்களும், 2 ஆயிரத்து 170 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். இதில் ஆயிரத்து 931 மாணவர்களும், 2 ஆயிரத்து 139 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 95.93 சதவீதம் ஆகும். தக்கலை கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 150 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 889 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 3 ஆயிரத்து 188 பேர் தேர்வு எழுதியதில் 3 ஆயிரத்து 146 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 95.22 சதவீதம் ஆகும்.

குமரி மாவட்டத்தில் 4 கல்வி மாவட்டங்களில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் அதிக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்