குமரன் பூங்கா மேம்பாட்டு பணி

மயிலாடுதுறை குமரன் பூங்கா மேம்பாட்டு பணி ராஜகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2022-09-13 18:10 GMT

மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் உள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பூங்கா மேம்பாட்டுப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை உறுப்பினர் ராஜலெட்சுமி ராஜேந்திரன், நகராட்சி பணி ஆய்வாளர்கள் ரம்யா, ராஜாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகரசபை உறுப்பினர்கள் ரிஷி, சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்