குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-18 00:48 GMT

புது டெல்லி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா புகழ்பெற்றது. விழாவையொட்டி கடந்த 20 ஆண்டுகளாக அதிகப் பணம் வசூல் செய்ய வேண்டி சிலர் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளை கொண்டு ஆபாச நடனம் நடத்துகிறார்கள்.

இதற்கு தடை கோரி மதுரை ஐகோர்ட்டில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொது நல வழக்கு, கடந்த மாதம் 4-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ததுடன் இனி ஆபாசமாக ஆடினால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் சார்பில் வக்கீல் அக்சத் ஸ்ரீவாஸ்தவா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் குலசேகரன்பட்டினம் தசரா சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் ஆட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்