திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

சிவகிரி சேனை தலைவர் மேல்நிலைப்பள்ளியில் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update:2022-07-09 18:59 IST

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் 2021-2022 கல்வி ஆண்டில் நடைபெற்ற (என்.எம்.எம்.எஸ்) தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 9-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் முகாசினி, ஹரிணிதங்கம், ரவீணா ஆகியோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் தலா ரூ.1,000 வீதம் பிளஸ்-2 வரை வழங்கப்பட உள்ளது.

தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளியின் செயலாளர் ஆர்.வி.கே.தங்கேஸ்வரன், சிவகிரி சேனைத்தலைவர் மகாசபை தலைவர் மாரியப்பன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா, தலைமை ஆசிரியர் சக்திவேலு மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சேனைத்தலைவர் மகாசபை அறப்பணி குழு, கல்வி பணிக்குழு நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்