சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்ற சர் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
நாகையை அடுத்த பாப்பாகோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு தரவரிசை பட்டியலில் 3 துறைகளில் முதலிடமும், 14 துறைகளில் 18 இடங்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளது. அதேபோல் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தரவரிசை பட்டியலில் தமிழகத்தில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு விழா சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன், கல்லூரி இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். கல்லூரி தாளாளர், கல்லூரி செயலாளர், கல்லூரி இயக்குனர், பொறியியல் கல்லூரி முதல்வர் குமாரவடிவேல் ஆகியோர் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் செயல்பாடுகள் பற்றி பேசினர். முன்னதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அருணா வரவேற்றார். முடிவில் மேலாண்மை துறை பேராசிரியர் ரூபாலா நன்றி கூறினார்.