34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்
100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 34 மாதங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1,498 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும், 50 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு 15 கோவில்களிலும் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களில் பழுதுபார்த்தல் மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு திருக்குடமுழுக்கு விழா நடத்தப்படு வருகிறது. அந்த வகையில் 07.05.2021 முதல் 20.03.2024 வரை 1,498 திருக்கோவில்களுக்கு சிறப்பாக திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடமுழுக்கு விழா நடைபெற்ற கோவில்களின் விவரங்களையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.