மாயவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2023-08-19 15:52 GMT


மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மாயவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறவுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று அமராவதி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து முளைப்பாலிகை அழைத்து வருதலுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.மேலும் ஹோமங்கள், ஆகுதிகள், ஆராதனைகள் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று திருக்கல்யாண சீர்வரிசை அழைத்தல், கோபுரக்கலசம் நிறுவுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இன்று (ஞாயிறுக்கிழமை) காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் விமானங்கள், மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மூலவருக்கு திருக்கல்யாணம் திருமாங்கல்யம் சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை திருமூர்த்திமலை பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள் கோவில் பாஞ்சராத்ர ஆகம வித்வான் ஞாந போத ஆசிரியர் வெ.ரமேஷ் என்ற ராமசாமி பட்டாச்சாரியார் மற்றும் வைஷ்ணவ குழாம் நடத்தவுள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உபதலைவர் கி.சுந்தர்ராஜன், செயலாளர் தி.குமரவேல், துணை செயலாளர் தி.மனோகரன், பொருளாளர் கா.ஆ.கி.வெங்கடாச்சலம், கோவில் அர்ச்சகர் து.சுப்பிரமணிய சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் திருப்பணிக்குழு மகளிரணி, இளைஞரணி, ராஜ பைரவர் குல பெருமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்